சென்னையில் ஜூன் 1 முதல் பஸ், ரயில் ஓடுமா.. மருத்துவக்குழு அளித்த பரிந்துரை என்ன? பரபரப்பு தகவல் - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, May 30, 2020

சென்னையில் ஜூன் 1 முதல் பஸ், ரயில் ஓடுமா.. மருத்துவக்குழு அளித்த பரிந்துரை என்ன? பரபரப்பு தகவல்

சென்னையில் ஜூன் 1 முதல் பஸ், ரயில் ஓடுமா.. மருத்துவக்குழு அளித்த பரிந்துரை என்ன? பரபரப்பு தகவல்




சென்னை: சென்னையில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தை இயக்க அனுமதிக்கக்கூடாது என்று மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 618 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13362 ஆக உயர்ந்துள்ளது.
எங்கு பாதிப்பு அதிகம் இதில் 6869பேர் குணம் அடைந்துவிட்டனர். 109 பேர் உயிரிழந்துள்ளனர். 6300 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
முற்றிலும் பாதிப்பில்லை மற்ற மாவட்டங்களில் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. முன்னதாக அரியலூர், விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்த போதிலும் இப்போது வேகமாக குறைந்துவிட்டது. குறிப்பாக கோவை, நீலகிரி ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இதில் சில மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களே இல்லை.

லாக்டவுன் உறுதியாகிறது இந்த சூழலில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை கடுமையாக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது.அந்த லிஸ்டில் பிரதானமாக இடம் பிடித்திருப்பது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் தான். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவக்குழு இன்று மீண்டும் ஆலோசனை நடத்தியது

வழிபாட்டு தலங்கள் திறப்பு அந்த ஆலோசனையில் மருத்துவக்குழு சென்னையில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தொடங்குவது சரியாக இருக்காது என்றும், அதிக அளவு உயிரிழப்புகளை சந்திக்க வேண்டியது வரும் என்றும் முதல்வரிடம் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவக்குழு சென்னையில் வழிபாட்டு தலங்களை திறக்கக்கூடாது என்றும் பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது, சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன





No comments:

Post a Comment

Post Bottom Ad