வீணாகும் காய்கனி... வேதனையில் வியாபாரிகள்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 1ந் தேதி முதல் கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டது. அங்கு வியாபாரம் செய்து வந்த பழ வியாபாரிகளில் சிலர் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.*
வியாபாரிகளில் சிலர் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையிலும், வீட்டுத் தனிமைபடுத்ததிலும் இருந்து வருகின்றனர். இதன் காரணமாகவும், முற்றிலும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்ட காரணத்தாலும் யாரும் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள தங்கள் கடைகளுக்கு செல்லவில்லை.
ஆள் நடமாட்டம் இல்லாத இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சமூக விரோத குமபல்கள் கடைகளின் பூட்டை உடைத்து பழங்களை பதப்படுத்த பயன்படும் ரூ.150/ மதிப்புக் கொண்ட பிளாஸ்டிக் டிரேக்களை ஆயிரக்கணக்கில் அள்ளிச் சென்றுள்ளனர். இது மட்டுமல்லாமல் பழங்களை விற்பனைக்கு அடுக்க பயன்படும் அட்டைப் பெட்டிகளை தூக்கிச சென்றுள்ளனர்.
திரு.சாகித் என்ற வியாபாரியின் கடைப் பூட்டை உடைத்து ரூபாய் மூன்று இலட்சம் அளவிற்கு டிரேக்களையும், அட்டைப் பெட்டிகளையும் திருடியிருக்கின்றனர். சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கு போன கடை ஊழியரை கத்தியை காட்டி "ஓடி விடு" என மிரட்டி இருககின்றனர்.
இதே போலவே திரு.சலீம் என்பவரது கடையின் பூட்டை உடைத்து பொருள்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு வரும் இந்த கும்பல்கள் கடையின் கண்காணிப்பு கேமராக்களையும் தூக்கிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இரவு பகலாக பரபரப்புடன் இயங்கி வந்த வணிக வளாகத்தை சமூக விரோத குமபல்கள் தங்கள் வசிப்பிடமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட தற்காலிக சந்தையில், சேமிப்பு வசதி இல்லாததால் மூட்டை மூட்டையாக காய்கறிகள் வீணாகி குப்பையில் கொட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றின் மையப்புள்ளியாக மாறிப்போன சென்னை கோயம்பேடு காய்கனி சந்தை மூடப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு மொத்த வியாபாரிகள் மட்டுமே வியாபாரம் செய்து வருகின்றனர். கோயம்பேடு சந்தையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் டன்கள் வரை விற்பனையான காய்கனிகள் திருமழிசையில் சில நூறு டன்களே விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு சந்தை நகரப் பகுதியில் அமைந்திருப்பதால் அதிகபட்ச விபாபாரம் நடந்ததாகக் கூறும் வியாபாரிகள், திருமழிசையில் அதற்கு நேர் எதிராக இருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். எனவே சுகாதாரப் பணிகளை முடித்துவிட்டு கோயம்பேடு சந்தையை விரைவில் திறக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமழிசையில் தினசரி மூட்டை மூட்டையாக நூற்றுக்கணக்கான கிலோ காய்கனிகள் குப்பையில் கொட்டப்பட்டு வருகின்றன.
கோயம்பேடு சந்தையில் காய்கனிகளை சேமித்து வைக்கும் கிட்டங்கி வசதி இருந்தாகக் கூறும் வியாபாரிகள், தற்போது வெயில் சுட்டெரிப்பதாலும், சேமிப்புக் கிட்டங்கி வசதி இல்லாததாலும், சிறு வியாபாரிகளை அனுமதிக்காததாலும் காய்கனிகள் வீணாவதாகத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment