தமிழ்நாடு Unlock 1.0 ஊரடங்கு தளர்வுகள் என்ன - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Sunday, May 31, 2020

தமிழ்நாடு Unlock 1.0 ஊரடங்கு தளர்வுகள் என்ன

ஊரடங்கு - முழு விவரம்

வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்.

50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி- தமிழக அரசு.

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்.

ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.

வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு- தமிழக அரசு.

பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி?

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்லில் அனுமதி,

தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.

நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.

திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனுமதி.

நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடக்கம்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.

50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்,

ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை.

பொது போக்குவரத்து அனுமதிக்கு 8 மண்டலங்களாக பிரிப்பு.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு- தமிழக அரசு.

பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு.

ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை.

மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை- தமிழக அரசு.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை.

ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது.

கொரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு.

மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்.

மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு- தமிழக அரசு.

வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ( நகை, ஜவுளி போன்றவை) 50 % பணியாளர்களுடன் செயல்படலாம்.

ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்க வேண்டும் - தமிழக அரசு.

ஜூன் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு.

இணைய வழி கல்வியை கல்வி நிறுவனங்கள் தொடரலாம்.
மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை நீட்டிக்கப்படுகிறது.

ஜூன் 1 முதல் பொதுப் போக்குவரத்து 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அனுமதி.

அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதி.

பேருந்துகளில் 60% இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி.

வெளிமாநிலங்கள், வெளி மண்டலங்களுக்கு சென்று வர இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறை.

டீக்கடைகள், உணவு விடுதிகளில் ஜூன் 7 வரை பார்சல் மட்டும் அனுமதி.

144 தடை உத்தரவின்படி 5 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடரும்.

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

தமிழக அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் - முதலமைச்சர்.

அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளருக்கு ரூ.2500 வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad