இன்னும் ஆபத்து அதிகரிக்கலாம்.. தயாராக இருக்கிறோம்.. தமிழக மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை
சென்னை: முகக் கவசத்தை முகத்தில் போட்டாலே, கொரோனா பரவல் குறைந்துவிடும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், மருத்துவ நிபுணர் குழு, ஆலோசனை நடத்தினர். இது முதல்வருடனான 5வது ஆலோசனை கூட்டமாகும். பின்னர் நிருபர்களிடம் மருத்துவர் குழுவை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கேஸ்கள் அதிகரித்து வருவது எதிர்பார்த்ததுதான். இது புது விஷயம் கிடையாது. இன்னும் ஆபத்து அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் சென்னை போன்ற நகரங்களில் மக்கள் நெருக்கமாக இருப்பதால், இது எதிர் பார்த்ததுதான்.
No comments:
Post a Comment