வைகாசி சோம வாரத்தில் சிவ வழிபாடு கடன் தீரும், நிம்மதி பெருகும். - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Sunday, May 31, 2020

வைகாசி சோம வாரத்தில் சிவ வழிபாடு கடன் தீரும், நிம்மதி பெருகும்.

வைகாசி மாதத்தின் சோம வாரத்தில், சிவ வழிபாடு செய்யுங்கள். கடன் தொல்லையில் இருந்தும் மனக்குழப்பத்தில் இருந்தும் விடுபடுவீர்கள்.
தென்னாடுடைய சிவனை வணங்குவது மிகப்பெரிய நற்பலன்களை வாரி வழங்கும். சிந்தையில் தெளிவையும் குடும்பத்தில் அமைதியையும் வழங்கும். ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறார்கள் சிவபக்தர்கள்.

வைகாசி மாதம் என்பது அற்புதமான மாதம். இந்த மாதத்தில் விசாக நட்சத்திர நாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில், விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள் பக்தர்கள்.

அதேபோல், வைகாசிச் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகையை தரிசிக்க உகந்த அருமையான நாட்கள். இந்தநாளில் அம்மன் வழிபாடு செய்வது இழந்தவற்றையெல்லாம் தரும். இல்லத்தில் ஒற்றுமையை மேலோங்கச் செய்யும்.

அடுத்து, வைகாசி மாதத்தின் திங்கட்கிழமைகள், சிவனாருக்கு உகந்தவை. இந்தநாளில், சிவ வழிபாடு செய்வதும் சிவ புராணம் பாராயணம் செய்வதும் ருத்ரம் ஜபிப்பதும் நல்ல நல்ல பலன்களை வழங்கும் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சோமன் என்றால் திங்கள். திங்கள் என்றால் சந்திரன். அந்த சந்திரனை பிறையென தலையில் சூடிக்கொண்டிருக்கிறார் சிவபெருமான். எனவே, அக்கினி நட்சத்திர காலத்துக்குப் பிறகு வரும் சோம வாரத்தில், சிவபெருமானை தரிசிப்பதும் வேண்டிக்கொள்வதும் ஆராதனைகள் செய்வதும், மனோபலத்தைப் பெருக்கும். மனகிலேசத்தைப் போக்கும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.

வைகாசித் திங்களில், அதாவது வைகாசி மாதத்தில், திங்கட்கிழமையில் தென்னாடுடைய சிவனாரை வழிபடுங்கள். முடிந்தால், வில்வம் சார்த்தி வழிபடுங்கள். வீட்டில் விளக்கேற்றி, ருத்ரம் பாராயணம் செய்யுங்கள். சிவபுராணம் படியுங்கள். தேவாரம் - திருவாசகம் படியுங்கள்.

உங்கள் கடனெல்லாம் அடைத்து நிம்மதியான வாழ்வைப் பெறுவீர்கள். இல்லத்தில் நிம்மதியும் அமைதியும் குடிகொள்ளும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad