முன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள் | Natural tips for Hair Grow in front side - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, May 28, 2020

முன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள் | Natural tips for Hair Grow in front side

Tamil Maruthuvam|தமிழ் மருத்துவம் 

முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டு செல்வதற்கான காரணங்கள்:

முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டு செல்வதற்கான காரணங்கள்:
வயதானால் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை தான் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே போவது.

இந்த பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்று பார்த்தோமானால், பரம்பரை காரணமாக கூட இருக்கலாம்,
ஒழுங்கற்ற தலைமுடி பராமரிப்பு, ஒரே சைடாகவே தலை சீவுவது போன்ற காரணங்களினால் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது.

முடி வளர டிப்ஸ் – முன் நெற்றியில் முடி வளர:

தலை முடி வளர என்ன செய்ய வேண்டும்: 

1.முடி வளர டிப்ஸ் - வெங்காயம்
வெங்காயத்தில் அதிகளவு சல்பர் அடங்கியுள்ளது என்பதால்
 வெங்காயத்தை அரைத்து அவற்றில் சாறு எடுத்து முடி உதிர்ந்த இடத்தில் தடவும்போது, இது மீண்டும் நெற்றியில் முடி வளர வேர்களை உருவாக்கி தருகின்றது.

எனவே வெங்காயத்தின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின்பு தலையலச வேண்டும் இவ்வாறு வாரத்தில்
 ஒரு முறை செய்து வர முன் நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.

2. முடி வளர டிப்ஸ் : கருமிளகு:
பெரிய முடி வளர டிப்ஸ்: மிளகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இதனால் முடியின் வேர்க்கால்கள் உறுதியாகி நெற்றியில் முடி வளர உதவுகிறது.

3.முடி வளர டிப்ஸ்: மிளகு
மிளகை அரைத்து அவற்றில் சிலதுளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நெற்றியில் முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
பின்பு சிறிது நேரம் வைத்திருந்து பின்பு தலையலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.

4.முடி வளர டிப்ஸ் : கொத்தமல்லி:
முன் நெற்றியில் முடி வளர உதவுகிறது.  இந்திய கொத்தமல்லியில் வைட்டமின் சி, இரும்பு சத்து, புரோட்டின் ஆகியவை அடங்கியுள்ளது. கொத்தமல்லி முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து போராடும் பேராற்றல் கொண்டது.முன் நெற்றியில் முடி வளர கொத்தமல்லியை அரைத்து தலையில் அப்ளை செய்து. 5 நிமிடம் சுழற்சி வடிவில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு ஷாம்பு போட்டு தலையலச வேண்டும். இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர நெற்றியில் முடிவளர ஆரம்பிக்கும்.

5.முடி வளர டிப்ஸ் – பீட்ருட் இலை
பீட்ருட் இலையில் அதிகளவு பொட்டசியம் நிறைந்துள்ளது, அதுமட்டும் இன்றி விட்டமின் பி6 உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. எனவே சிறிதளவு பீட்ருட் இலைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை தண்ணீரில் வேகவைத்து, பின்பு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். பின்பு இந்த பேஸ்ட்டுடன் சிறுதளவு மருதாணி பொடி கலந்து, தலையில் அப்ளை செய்யவும்.பின்பு 20 நிமிடங்கள் கழித்து தலையை ஷாம்பு போட்டு அலச வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வர நெற்றியில் முடிய வளர ஆரம்பிக்கும்.

6.முடி வளர டிப்ஸ் : ஆலிவ் ஆயில்
உதிர்ந்த முடியை மீண்டும் வளர செய்வதற்கு ஆலிவ் ஆயில் பெரிதும் உதவுகிறது. இந்த ஆலிவ் ஆயிலில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் விட்டமின் ஈ அதிகளவு நிறைந்துள்ளது. முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.
எனவே நெற்றியில் முடி வளர ஆலிவ் ஆயிலுடன் சிறிதளவு இலவங்க பட்டை பொடி மற்றும் ஒரு டீஸ்புன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடி உதிர்ந்த இடத்தில் இந்த கலவையை தடவ வேண்டும்.பின்பு 20 நிமிடங்கள் கழித்து தலை அலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad