தமிழ் மாதங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு விளக்கம் - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

தமிழ் மாதங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு விளக்கம்




1. சித்திரை (Chiththirai) - மேழம்(Merham/Mezham)

2. வைகாசி (Vaigaasi) - விடை (Vidai)

3. ஆனி (Aani) - ஆடவை (Aadavai)

4. ஆடி (Aadi) - கடகம் (Kadagam)

5. ஆவணி (Aavani) - மடங்கல் (Madangal)

6. புரட்டாசி (Purattaasi) - கன்னி (Kanni)

7. ஐப்பசி (Aippasi) - துலை (Thulai)

8.கார்த்திகை (Karthigai) - நளி (Nali)

9. மார்கழி (Margarhi/Margazhi) - சிலை(Chilai)

10. தை (Thai) - சுறவம் (churavam)

11. மாசி (Maasi) - கும்பம் (Kumbam)

12. பங்குனி (Panguni) - மீனம் (Meenam)

தமிழ் புத்தாண்டு விளக்கம்
சூரியனை பூமி சுழலும் போது, 23.5 டிகிரி கோணத்தில் மாறி மாறிச் சுழலும். இதனால், பூமியில் சூரியன் இருக்கும் திசை, தென்புறத்தில் இருந்து வடபுறத்திற்கும், வடபுறத்தில் இருந்து தென் புறத்திற்கும் மாற்றி மாற்றி சுழலும். இவை தான் உத்ராயணம், தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. இதில், உத்ராயண  காலத்தில் அதாவது சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும், அதே போல, தட்சிணாயண காலத்தில், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும். இதில் (உத்ராயண காலம்) சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும் காலம் அல்லது மாதம் என்பது, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மற்றும் ஆனி காலமும், மற்ற மாதங்கள் தட்சிணாயண காலமும் ஆகும். உத்ராயண காலத்தின் துவக்கத்தை தான், தை பொங்கல் நாளாக கொண்டாடுகிறோம்.

இதனால் தான் இந்த நாளை, தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பது, அதை வலியுறுத்துபவர்களின் வாதம். ஆனால் சித்திரை, 1ம் தேதி, தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பவர்கள், சூரியன் சரியாக வடக்கிற்கும் தெற்கிற்கும் நடுவில் உதிக்கும் போது, சரியாக கிழக்கு திசையில் உதிக்கும் நாளை தான், தமிழ் புத்தாண்டு நாளாகும் என கூறுகின்றனர். ஆண்டிற்கு இரண்டு முறை தான் சூரியன் சரியாக கிழக்கு திசையில் உதிக்கும். அதில் ஒரு நாள் சித்திரை மற்றொரு நாள் புரட்டாசி.

No comments:

Post a Comment

Post Bottom Ad