வெங்காச்சாறு
வெங்காயச்சறு முடி வளர்ச்சியை தூண்டும். சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக்கொண்டு நன்றாக தலையில் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்து பிறகு சீயக்காய் தேய்த்து அலசிவிடவேண்டும். இதுபோல வாரம் ஒருமுறை செய்து வர வேண்டும்.
தேங்காய் பாலில் வைட்டமின் E இருப்பதால் முடிவளர்ச்சிக்கு உதவுகிறது. தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து பிறகு அலச வேண்டும். இது போல் வாரம் ஒரு முறை செய்து வர வேண்டும்.
முட்டை
முட்டையில் ப்ரோட்டின், மினரல்ஸ், விட்டமின்ஸ், கார்போஹைட்ரேட், கொழுப்பு ஆகிய சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இது தலை முடி வளர்ச்சிக்கு மிக நல்லது. முட்டையை உடைத்து நன்றாக கலக்கி முடியின் அடிபாகத்தில் நன்றாக தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து பிறகு குளிக்கவும். இது புதிய முடிகளை மிக வேகமாக வளர செய்யும்.
சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை கூந்தலையும் பளபளப்பாக்கும், பொடுகை போக்கும். இதை வாரம் இருமுறை நன்றாக தேய்த்து குளிக்கவேண்டும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் இரத்த அணுக்களை அதிகரிக்க செய்கிறது. நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
எலுமிச்சம்பழம்
எலுமிச்சம்பழம்
எலுமிச்சை சாற்றில் வைட்டமின் பி, சி மற்றும் போலிக் ஆசிட் இருப்பதால் அனைத்து தலைமுடி பிரச்சனைகளுக்கும் சிறந்ததாகும். எலுமிச்சை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி சாறு எடுத்து இரண்டு மடங்கு தேங்காய் எண்ணையுடன் கலந்து தேய்த்து குளித்து வர புதிய முடிகளை வளர செய்யும்
மசாஜ்
மசாஜ் செய்வதால் தலையில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதம் எண்ணெய் இவற்றில் ஒன்றை பயன்படுத்தி தலையில் மசாஜ் செய்து வரலாம்.
மன அழுத்தம்
முடி உதிர்தலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம். மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது மிக முக்கியம். இதிலிருந்து விடுபட யோக செய்யலாம். யோக மன அழுத்தத்தை போக்கி மனதை ஒருநிலை படுத்துகிறது.
No comments:
Post a Comment