உங்களுக்கு வந்து இருப்பது சாதாரண காய்ச்சலா? கொரோனாவா? எப்படி கண்டுபிடிக்கிறது? || what Is The Difference Between Corona And Ordinary Flu - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Wednesday, May 27, 2020

உங்களுக்கு வந்து இருப்பது சாதாரண காய்ச்சலா? கொரோனாவா? எப்படி கண்டுபிடிக்கிறது? || what Is The Difference Between Corona And Ordinary Flu


உங்களுக்கு வந்து இருப்பது சாதாரண காய்ச்சலா? கொரோனாவா? எப்படி கண்டுபிடிக்கிறது?

காய்ச்சல் வந்தாலே கொரோனா மட்டுமா, ஏனெனில் ஃப்ளு காய்ச்சலும் இதே அறிகுறிகளைத்தான் கொண்டிருக்கிறது.இரண்டிற்கும் என்ன வேறுபாடு? உங்களுக்கு இருப்பது சாதாரண காய்ச்சலா அல்ல,கொரோனா அறிகுறியா? என்பது பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

இன்று உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு தொற்றுநோயாக உலகத்தின் பல நாடுகளில் வேகமாக பரவி வருவது கொரோனா வைரஸ். கிட்டத்தட்ட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ,
இந்த நோயால் பலியானவர் எண்ணிக்கை 8000 எண்ணிக்கையை தாண்டிவிட்டது. மக்கள் அனைவரும் தங்களை இந்த தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நினைக்கின்றனர். பயமுறுத்தக்கூடிய அளவிற்கு பெரிதாக இருக்கும் இந்த தொற்று பாதிப்பு பற்றி தவறான கருத்துக்கள் மற்றும் கட்டுக்கதைகள் வளர்ந்த வண்ணம் உள்ளன.
 இதனால் மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் நிலவுகிறது. அதில் முக்கியமான ஒன்று ஒரு மனிதனை கிருமி பாதித்தவுடன் அது ஃப்ளு வைரஸ் அல்லது கொரோனா வைரஸ் இதில் எது அவனைத் தாக்கியது என்ற குழப்பம். இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் ஆரம்ப அறிகுறி சளி, இருமல் , உயர் காய்ச்சல் போன்றவையாகும். ஃப்ளு பாதிப்பிற்கு இதே அறிகுறிகள் தோன்றும். ஆகவே இந்த அறிகுறிகள் தென்பட்டவுடன் அது கொரோனா பாதிப்பா அல்லது ஃப்ளு பாதிப்பா என்பதை அறிந்து கொள்ள ஒரு குழப்பம் தோன்றும்.

COVID-19 எனப்படும் கொரோனா மற்றும் ஃப்ளு ஆகிய இரண்டும் வைரஸ் தாக்கத்தால் உண்டாகும் தொற்று பாதிப்பாகும். இவை இரண்டுமே மனிதனை மனிதன் தொடுவதால் பரவக் கூடியதாகும். கொரோனா மற்றும் ஃப்ளு வைரஸ் ஆகிய இரண்டுமே மிகப்பெரிய தொற்று கிருமிகளாகும், இவை இரண்டுமே சுவாசம் தொடர்பான பாதிப்பை உண்டாக்கக்கூடும் . குமட்டல், மூச்சுத்திணறல் , நெஞ்சு சளி , காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு வழி வகுக்கும் , சில நேரங்களில் மேலும் தீவிரம் அடைந்து நிமோனியாவிற்கு வழி வகுக்கும்.


இரண்டுக்கும் என்ன வேறுபாடு ?

கொரோனா வைரஸ் மற்றும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் ஆகிய இரண்டும் ஒரே அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் இவை இரண்டும் வெவ்வேறு வைரஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். COVID-19 என்பது 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நாவல் கொரோனா வைரஸ் ஆகும். இதற்கு முன்னர் மனித இனத்தில் இந்த கிருமி காணப்படவில்லை. இதனுடன் ஒப்பிடும்போது, இன்ப்ளூயன்ஸா வைரஸால் உருவாகும் ஃப்ளு பாதிப்பு, பல காலங்கள் முன்னர் கண்டறியப்பட்ட ஒரு தொற்று நோயாகும் . இன்ப்ளூயன்ஸா மற்றும் இதனை ஒத்த மற்ற கிருமிகளை விட அதி வேகமாக கொரோனா பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முகத்துக்கு மாஸ்க் போட்டுகிட்டா கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியுமா? உண்மை என்ன?

அறிகுறிகள்

திடீர் காய்ச்சல், சளி, இருமல், தீவிர தசை வலி மற்றும் உடல் வலி, வறண்ட இருமல், குளிர் , 100.5 டிகிரிக்கு அதிக காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் கொண்ட ஃப்ளு காய்ச்சல் சாதாரண சளியை விட மிகவும் ஆழமானது.


கொரோனா வைரஸ் தாக்கிய வழக்கின் ஆரம்ப நிலை, தீவிர சளி அல்லது ஃப்ளு ஆகியவற்றிற்குள் வேறுபாட்டை கண்டறிவது சற்று கடினமான செயலாகும். பரிசோதனை மூலம் மட்டுமே ஃப்ளு அல்லது கொரோனாவைக் கண்டறிய முடியும். இருப்பினும், உண்மையில் இதற்கான வேறுபாட்டை அறிந்து கொள்ள இந்த அறிகுறிகள் எடுத்துக் கொள்ளும் கால அளவு உதவும். ஆம், சளி மற்றும் ஃப்ளு காய்ச்சல் , வைரஸ் தாக்கிய 2-3 நாட்களுக்குள் வளர்ச்சி அடைந்துவிடும், ஆனால் கொரோனா வைரஸ் தாக்கி 2-14 நாட்களில் மட்டுமே வளர்ச்சி அடையும் என்று நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கிறது.



இரண்டில் எது அபாயகரமானது ?

நாவல் கொரோனா வைரஸ் குறித்து மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ஃப்ளு தொற்று உலகின் மிகப் பெரிய சுகாதார அபாயமாக விளங்கி வருகிறது. இதன் சிகிச்சையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஃப்ளு பாதிப்பின்அபாயத்தைக் குறைக்க மற்றும் அதன் சிக்கலைத் தடுக்க தடுப்பூசிகள் , டாமிஃப்ளு போன்ற மருந்துகள் இருக்கும் நிலையில், COVID-19 எனப்படும் நாவல் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எந்த ஒரு தடுப்பூசியும் மருந்துகளும் தற்போது வரை இல்லை . இதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் பல்வேறு சுகாதார நிறுவனங்கள் பரிசோதனை செய்து வருகின்றன. இதற்கான முதல் தடுப்பூசி நமக்கு கிடைக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். சிறந்த சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றுவதால் மட்டுமே தற்போது தொற்று பாதிப்பு பரவாமல் தடுக்க முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad