what Is Self Quarantining? How To Follow That COVID-19: யாரெல்லாம் தனியாக இருக்க வேண்டும்? என்னவெல்லாம் செய்யக் கூடாது?... - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, May 30, 2020

what Is Self Quarantining? How To Follow That COVID-19: யாரெல்லாம் தனியாக இருக்க வேண்டும்? என்னவெல்லாம் செய்யக் கூடாது?...

Tamil Maruthuvam|தமிழ் மருத்துவம் 

What Is Self Quarantining? How To Follow That COVID-19: யாரெல்லாம் தனியாக இருக்க வேண்டும்? என்னவெல்லாம் செய்யக் கூடாது?...

1.யாரை சுய தனிமைப்படுத்துதல் செய்ய வேண்டும்?
புதிய கொரோனா வைரஸ்க்கான பரவுதல் வாய்ப்பு இருந்தால் மட்டுமே நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) சுய தனிமைப்படுத்துதலை பரிந்துரைக்கிறது.

கீழ்க்கண்ட நபர்கள் COVID-19 யை அதிகம் பரப்ப வாய்ப்புள்ளது

* அண்மையில் சீனாவின் உகான் மாகாணத்திற்கு பயணம் செய்து திரும்பியவர்கள்

* தொடர்ச்சியான பயணங்களில் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு கொரோனா பரவி இருக்க கூடும்.

எனவே சமூகத் தொடர்பில் இருந்து துண்டித்து கொள்வது, பயணத்தை தவிர்ப்பது போன்றவை கொரோனோ பாதிப்பில் இருந்து நம்மை காக்கும்.


2. எப்படி தனிமைப்படுத்துதல் அவசியம்

ஒரு வேளை உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் அறிகுறிகள் தென்பட்டால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது நல்லது. இதன் மூலம் கொரோனா மற்றவர்க்கு பரவுவதை தடுக்க முடியும். அறிகுறிகள் தென்படும் நபர்களை நீண்ட நாட்களாக பிரித்து வைத்து அவருக்கு COVID-19 தாக்குதல் இருக்கிறதா என்பதை கண்காணிப்பதே முதல் குறிக்கோள்.

COVID-19 பரவுவதை தடுக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது முக்கியம்

தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிருங்கள். முடிந்த வரை வீட்டிற்குள்ளேயே இருப்பது நல்லது.

பள்ளிக் கூடங்கள், கல்விக் கூடங்கள், பொது போக்குவரத்து போன்ற மக்கள் கூடும் இடங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அதிகமாக பயன்படுத்துவதை தவிருங்கள்.

உங்கள் மருத்துவரை சந்திக்க நேர்ந்தால் மட்டுமே வெளியே செல்ல முற்படுங்கள்.

வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ளுதல், செல்லப் பிராணிகளுடன் நெருக்கமாக இருப்பதில் இருந்து உங்களை பிரித்துக் கொள்ளுங்கள்.

3. தனித்திருங்கள்

முடிந்தால் உங்களுக்கு என்று தனி அறை மற்றும் தனி குளியலறையை பயன்படுத்துங்கள்.

கொரோனா வைரஸ் செல்லப் பிராணிகளுக்கு பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் அது குறித்து ஆராய்ச்சி மேலும் அறியப்படும் வரை செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருங்கள்.

உங்க கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுங்கள். ஏனெனில் சரியான கை சுகாதாரத்தை கடைபிடிப்பது வைரஸ் பரவாமல் தடுக்க உதவும்.

மூக்கை குடைதல், தும்மல் மற்றும் இருமல் செய்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

குறிப்பாக உங்க முகத்தை தொடுவதை தவிருங்கள்

4.​எதையெல்லாம் கொடுக்கக் கூடாது?

பொதுவாக பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து, சாப்பிடுவது நம்முடைய பழக்கமாக இருக்கலாம். அது நல்ல பழக்கம் தான். ஆனால் இந்த சூழலில் அதைத் தவிர்ப்பது தான் நல்லது. ஆனால் உங்களுடைய பொருட்களை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம்

குறிப்பாக கீழ்க்கண்ட பொருட்களை பகிர்வதை தவிருங்கள்

படுக்கைகள்

உணவுகள், குடிக்கும் டம்ளர் மற்றும் பாத்திரங்கள்.

கிச்சன் டவல், கை துடைக்கும் டவல்கள் இவற்றை மற்றவர்க்கு கொடுக்க வேண்டாம்.

மேற்பரப்பை கிருமி நீக்கம் செய்தல்


5. சுத்தம் செய்தல்

அடிக்கடி தொடுகின்ற இடத்தை தினமும் கிருமி நீக்கம் செய்ய துடையுங்கள்.

கொரோனா வைரஸ் மேற்பரப்பின் வழியாக ஒரு நபருக்கு பரிமாற்றம் அடைவது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் பல நாட்கள் மேற்பரப்பில் வாழ முடியும் என்று நம்பப்படுகிறது. எனவே கீழ்க்கண்ட சுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

வீட்டைச் சுற்றியுள்ள மேற்பரப்புகளை சுத்தம் செய்யுங்கள்

குளியலறை சாதனங்களை சுத்தம் செய்தல்

கிச்சன் கவுண்டர்டாப்ஸ்

கதவு கைப்பிடிகள்

கீ போர்டு

மொபைல் போன்

போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.


6.அறிகுறிகளை கண்காணியுங்கள்

ஒரு நாளைக்கு இரண்டு முறை ஏதேனும் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு விட சிரமம் இருக்கிறதா என்பதை கண்காணியுங்கள்.

மேலும் உங்களுக்கு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் தென்பட்டால் சுய தனிமைப்படுத்த முற்படுங்கள்.

நீங்கள் அறிகுறிகள் இருக்கும் சமயங்களில் வெளியே செல்ல நேர்ந்தாலோ அல்லது குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளும் நிலை, ஏற்பட்டால், பொது இடங்களில் மாஸ்க்கை அணிந்து கொள்ளுங்கள்.

இருமல் மற்றும் தும்மல் வரும் போது கைகளைக் கொண்டு மறைத்தால் உடனே கைகளை கழுவி விடுங்கள். மருத்துவரை அணுகுவதற்கு முன் டெலிமெடிசன் (போன் மூலம்) மருந்துகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு COVID-19 தொற்று இருந்தால் முன்னரே சுகாதார குழுவுக்கு கூறி விடுங்கள். டெலிமெடிசன் மருந்துகளை முன்னரே எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க முடியும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மேற்கண்ட உதவிக் குறிப்புகளை நாம் கவனமாக பின்பற்றுவதன் மூவம் COVID-19 இன் பரவலை மெதுவாக்க உதவுவோம். , உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களையும், கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களையும் பாதுகாக்க நாம் உதவலாம். உங்களுக்கு COVID-19 அறிகுறிகள் தென்பட்டால் 24/7 அவசர சிகிச்சை பிரிவிற்கு பேசலாம். இதன் மூலம் உங்களுக்கு சிகிச்சை தேவையா உங்களுக்கான ஆலோசனைகள் என்னென்ன என்பதையும் எங்களால் வழங்க முடியும் என்கிறது உலக சுகாதார மையம் . எனவே மேற்கண்ட
 உதவிக் குறிப்புகள் மூலம் ஒரு பாதிக்கப்பட்ட நபர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம்

No comments:

Post a Comment

Post Bottom Ad