கொரோனா பாதிப்பில் தமிழகத்திற்கு புதிய சிக்கல் . 4 நாட்களாக மாறவில்லை.. - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, May 30, 2020

கொரோனா பாதிப்பில் தமிழகத்திற்கு புதிய சிக்கல் . 4 நாட்களாக மாறவில்லை..

கொரோனா பாதிப்பில் தமிழகத்திற்கு புதிய சிக்கல் 4 நாட்களாக மாறவில்லை..


தமிழகத்தில் மிக குறைவான எண்ணிக்கையில் இன்று கொரோனா சோதனைகள் செய்யப்பட்டும் மிக அதிக அளவில் கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20246 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 11362 பேர்கள்
கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் நிலை இந்த நிலையில் தமிழகத்தில் மிக குறைவான எண்ணிக்கையில் இன்று கொரோனா சோதனைகள் செய்யப்பட்டும்  மிக அதிக அளவில் கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் தினமும் 13 ஆயிரம் வரை கொரோன சோதனைகள் செய்யப்படும். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 10-11 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளது. சில நாடுகள் கொரோனா சோதனைகள் 9 ஆயிரத்திற்கும் கீழ் செல்கிறது
நிறைய காரணம் இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது கொரோனா சோதனை செய்ய சில வரையறைகள் இருக்கிறது.
 அதாவது அறிகுறி தொடங்கி கொரோனா காண்டாக்ட் என்று நிறைய வரையறைகள் உள்ளது. இந்த வரையறைக்குள் இருக்கும் நபர்கள் தமிழகத்தில் குறைவாக இருக்கிறார்கள். இதனால் கொரோனா சோதனைகள் குறைவாக உள்ளது. அதேபோல் தமிழகத்தில் இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படும் எல்லோர்க்கும் கொரோனா சோதனை செய்யப்படுவது இல்லை

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை வெகு சிலருக்கு மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது கொரோனா சோதனை செய்யப்படுகிறது.இதுவும் தமிழகத்தில் கொரோனா சோதனைகள் குறைய காரணம் ஆகும். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் தமிழகத்தில் இப்படி குறைவாக கொரோனா சோதனைகளை செய்தும் கூட இன்று கேஸ்கள் அதிகமாக வந்துள்ளது. இன்று மட்டுமின்றி கடந்த 4 நாட்களாகவே 800+ கேஸ்கள் தமிழகத்தில் வருகிறது.குறைவான சோதனை எண்ணிக்கை குறைவான சோதனையில் அதிக கொரோனா கேஸ்கள் வருவது என்பது ஆபத்தான விஷயம் ஆகும்.
இது பெரிய அளவில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. இப்படி அதிக கேஸ்கள் தினமும் வந்தால் , எண்ணிக்கை வேகமாக
 அதிகரிக்கும். குறைவான சோதனைக்கு இவ்வளவு கேஸ்கள் வந்தால், அதிக சோதனைக்கு இன்னும் அதிகமாக கேஸ்கள் வர வாய்ப்புள்ளது
எத்தனை சோதனை அதாவது தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரம் சோதனைகள் எல்லாம் செய்தால் இன்னும் அதிக கேஸ்கள் வர வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் 65 கொரோனா சோதனை மையங்கள் இருக்கிறது. போதுமான அளவிற்கு கொரோனா சோதனை உபகரணங்கள் இருக்கிறது . ஆனாலும் கொரோனா சோதனைகள் குறைக்கப்பட்டு உள்ளது. இது அதிகரிக்கப்பட்டால் கேஸ்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதிகம் ஆக வாய்ப்பு தமிழகத்தில் இன்று மட்டும் 10569 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 11334 மாதிரிகள் கொரோனா
 சோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை 445194 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 466550 பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது







No comments:

Post a Comment

Post Bottom Ad