How will clean medicine, vegetables and fruits in this corona time || கொரோனா தொற்று சமயத்தில் மருந்துகள், காய், பழங்களை எப்படி சுத்தம் செய்து பயன்படுத்துவது? - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, May 28, 2020

How will clean medicine, vegetables and fruits in this corona time || கொரோனா தொற்று சமயத்தில் மருந்துகள், காய், பழங்களை எப்படி சுத்தம் செய்து பயன்படுத்துவது?

கொரோனா தொற்று நேரத்தில் மருந்துகள், காய், பழங்களை எப்படி சுத்தம் செய்து பயன்படுத்துவது? 

How To Sanitizing Fruits And Vegetables To Medicine Strips About Living With Corona virus !!!

கொரோனோ வைரஸ் தொற்றிலிருந்து நம்மை அன்றாடம் பாதுகாப்பதே பெரிய வேலையாக இருந்து வருகிறது. கிருமிநீக்கம் குறித்து
அரசாங்கமும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காய்கறிகள் முதல் நாம் வாங்கும் பொருட்கள் வரை கிருமி நீக்கம் செய்ய வேண்டியுள்ளது.
எப்படி தினசரி அன்றாட வாழ்க்கை பராமரிப்புகளை பின்பற்ற வேண்டும், எப்படி சுகாதார பராமரிப்பை
மேற்கொள்ள வேண்டும் போன்ற கேள்விகள் மக்களுக்கு இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. இது
குறித்து மக்களுக்கு நிறைய சந்தேகங்களும் எழுந்து வருகிறது.


பழங்கள் மற்றும் காய்கறிகளை கிருமி நீக்கம் எப்படி செய்ய வேண்டும், எப்படி சுகாதார நடவடிக்கைகளை கையாள வேண்டும் போன்ற ஏகப்பட்ட கேள்விகள் மற்றும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க பார்க்கலாம்.

நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தப்படுத்த வேண்டுமா

முதலில் நாம் வாங்கும் பழங்கள் முதல் காய்கறிகள் வரை அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டுமா. அவற்றை சுத்தப்படுத்த சரியான வழி என்ன? சில நிபுணர்களின் கூற்றுப்படி வைரஸ் சில மணி நேரம் பழங்கள் மற்றும் காய்கறிகளில் வாழுமா? இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தண்ணீரில் கழுவதாலோ சூரிய ஒளியில் வைப்பதாலோ கிருமிகள் போக வாய்ப்புள்ளதா? இதை எப்படி நாம் கிருமி நீக்கம் செய்யலாம். இதோ அதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வழிமுறைகள்

காய்கறிகளையோ, பழங்களையோ வீட்டிற்கு கொண்டு வந்த உடனேயே அவற்றைக் கையாளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட காய்கறிகளை தொடாமல் நான்கு மணி நேரம் ஒதுக்கி வையுங்கள். இந்த நான்கு மணி நேரத்தில் பாக்கெட்டை ரிமூவ் செய்து விட்டு காய்கறிகளை வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவுடன் ஊற வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் காய்கறிகள் மற்றும் பழங்களில் சானிட்டைசர் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் சானிட்டைசர் என்பது நம் உடல், எஃகு மற்றும் பிற மேற்பரப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


அதே மாதிரி காய்கறிகளையும் பழங்களையும் கிருமி நீக்கம் செய்ய ஒரு துளி பொட்டாசியம் பெர்மாங்கனெட்டை தண்ணீரில் சேர்க்கலாம். இது உங்களுக்கு மற்றொரு எளிதான வழியாகும்.

மூன்று மணி நேரம் வெளியே வைக்க முடியாத பொருட்கள்

காய்கறிகள் மற்றும் பழங்கள் என்றால் நான்கு மணி நேரம் வெளியே வைக்க முடியும். இதுவே நாம் உபயோகிக்கும் சீஸ், பால் மற்றும் பட்டர் போன்றவற்றை வெளியே வைக்க முடியாது. ஏனென்றால் இது சீக்கிரமே உருகி விட வாய்ப்புள்ளது. இதனா‌ல் அது கெட்டுப் போக வாய்ப்புள்ளது. எனவே இந்த மாதிரியான பொருட்களை சோப்பு நீரில் பாக்கெட்டுடன் போட்டு கழுவி எடுத்துக் கொண்டு உடனடியாக வெளிப்புற பாக்கெட்டை அப்புறப்படுத்தி விடுங்கள்.

குளிர்பானம் பாட்டில்கள், பிளாஸ்டிக் பெட்டிகளை எப்படி சுத்த பராமரிப்பு செய்வது

ஆய்வக கண்டுபிடிப்புகளின் படி வைரஸ் பிளாஸ்டிக் மற்றும் உலகங்களின் மேற்பரப்பின் மீது 24-48 மணி நேரம் வரை இருக்கும். எனவே அத்தகைய பொருட்களை உடனடியாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. அதை அறை வெப்பநிலையிலயே வைத்து இருக்க வேண்டும். அதை கொஞ்ச நேரத்திற்கு தொடாதீர்கள். அதை பிரிட்ஜில் வைப்பதற்கு முன் சோப்பு தண்ணீரில் கழுவி விட்டு உள்ளே வைக்க வேண்டும்.


சமைத்த உணவு வெளியில் இருந்து ஆர்டர் செய்தால் என்ன செய்வது

வெளிப்புற உணவில் சிக்கல் என்பது அவ்வளவு பெரிதாக இருக்காது. ஏனெனில் எல்லா உணவகங்களிலும் பாதுகாப்பாகத்தான் உணவுப் பொருட்களை கையாளுகிறார்கள். ஆனால் அதை டெலிவரி செய்ய பல மக்கள் வேலை பார்த்து வருவதால் நாம் கவனமாக செயல்பட வேண்டும்.

எனவே ஆர்டர் செய்து வந்த பொருட்களின் பிளாஸ்டிக் மற்றும் டப்பாக்களை உடனடியாக ரிமூவ் செய்யுங்கள். பிறகு கைகளை சோப்பு நீரில் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

மருந்து பொருட்கள்

மருந்து பொருட்களில் சானிட்டைசர் பயன்படுத்தலாமா என்ற எண்ணம் மக்களிடையே நிலவி வருகிறது. எனவே புதிய மருந்தை வாங்கி அதை அறை வெப்பநிலையில் பல மணி நேரம் மூடி வைக்க வேண்டும். ஏனெனில் மருந்து பல கைகளுடன் தொடர்புடையது என்பதால் நீங்கள் அதை வாங்க உடனேயே பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதே மாதிரி மருந்தை நேரடியாக சூரிய ஒளியில் வைக்காதீர்கள். ஏனெனில் அதன் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.


நாணயம் மற்றும் எழுது பொருட்கள்

நாணயம் மற்றும் எழுது பொருட்களை 3-4 மணி நேரம் வெளியேவே வைக்க முயலுங்கள். உலோக, பிளாஸ்டிக் மற்றும் மர மேற்பரப்புகளில் சானிட்டைசர் பயன்படுத்தலாம் என்பதால் பென்சில் மற்றும் பேனாக்களை உங்களால் எளிதாக சுத்தப்படுத்த முடியும்.

உங்க காலணிகள் மற்றும் உடைகள்

நாம் அன்றாடம் வெளியே செல்ல பயன்படுத்தும் காலணிகள் மற்றும் உடைகளை தவறாமல் சுத்தப்படுத்த வேண்டுவது அவசியம். ஏனெனில் வெளியே செல்லும் போது அசுத்தமான மேற்பரப்புகளை தொட நேரிடலாம் அதன் மேல் நடக்கலாம் போன்ற பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது.

எனவே நீங்கள் வீட்டிற்கு வந்ததும் வெதுவெதுப்பான நீரில் உடைகளை ஊற வைத்து பின்னர் அவற்றை சோப்பு நீரைக் கொண்டு துவையுங்கள். அதே மாதிரி கடைகளில் வாங்கும் புதிய உடைகளை உடனே பயன்படுத்த வேண்டாம். குறைந்தது பயன்படுத்தாமல் 48 மணி நேரமாவது அணியும் முன் வைத்து இருங்கள்.



அலுவலகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள்

பல அலுவலகங்கள் திறக்கத் தொடங்கி உள்ளதால் இங்கே சில செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவைகள் உள்ளன.

உங்களுக்கு தேவையான கண்ணாடி, பாட்டில், கப், ஸ்பூன், சர்க்கரை போன்ற பொருட்களை வீட்டில் இருந்தே எடுத்துச் செல்லுங்கள். கேண்டீனில் இருந்து பாத்திரங்களை ஒரு போதும் பயன்படுத்த வேண்டாம்.

அதே மாதிரி உங்க பவர் பேங்க், சார்ஜரை எடுத்துச் செல்லுங்கள். இதனால் நீங்கள் வேறு ஒருவரிடம் இருந்து கடன் வாங்க வேண்டியதில்லை.

அதே மாதிரி கைக்கு அடக்கமான பாட்டில் சானிட்டைசரை கையுடன் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேலையில் ஈடுபடுவதற்கு முன்பு உங்க மேசை மற்றும் மடிக்கணினிகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.


லிப்ட் பொத்தான்கள், ரெயில்கள், கதவுகள் மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிற மேற்பரப்புகளைத் தொடுவதை தவிருங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை தொட்டால் கூட உங்க கைகளை உடனடியாக சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிற்கு திரும்பி வந்ததும் உங்களுடன் எடுத்துச் சென்ற அனைத்தையும் சுத்திகரிப்பு செய்து கொள்ளுங்கள். அதற்கேற்ப கைகளை கழுவி விட்டு குளித்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad