காப்பான் படத்தில் பார்த்த காட்சிகள் நிஜத்தில் நடக்கப் போகிறதா? அச்சத்தில் விவசாயிகள்! || Locust Swarms Spotted In Jaipur; Feared On Crops In Several Indian States - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Wednesday, May 27, 2020

காப்பான் படத்தில் பார்த்த காட்சிகள் நிஜத்தில் நடக்கப் போகிறதா? அச்சத்தில் விவசாயிகள்! || Locust Swarms Spotted In Jaipur; Feared On Crops In Several Indian States

காப்பான் படத்தில் பார்த்த காட்சிகள் நிஜத்தில் நடக்கப் போகிறதா? அச்சத்தில் விவசாயிகள்!


நடிகர் சூர்யா நடித்து வெளியான காப்பான் திரைப்படத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசமாக்குவது போன்ற
காட்சி அமைக்கப்பட்டிருக்கும். Locust எனப்படும் அந்த வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசமாக்கி கடுமையான் உணவு பஞ்சத்தை
 ஏற்படுத்தக் கூடியது. தற்போது அந்த வெட்டுக்கிளிகள் ஆப்ரிக்க நாடுகளான கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா உள்ளிட்ட
 10 நாடுகளில் மையம் கொண்டு அங்கு பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன

இந்த வெட்டுகிளிகள் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளை கடந்து இந்திய பெருங்கடல் வழியாக இந்தியாவுக்குள்ளும்,
 பாகிஸ்தானுக்குள்ளும் அடுத்த மாதம் படையெடுக்கும் என ஐ.நா. சபையின் உண்வு மற்றும் வேளாண் அமைப்பின்
வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், வடக்கு சோமாலியாவில் இருந்து
வேறு சில பூச்சி இனங்களும் வரக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெட்டுக்கிளிகளின் கூட்டம் இன்று
காணப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெட்டுக்கிளிகளின்
 கூட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அம்மாநில அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெட்டுக்கிளி படையெடுப்பானது பாகிஸ்தான் எல்லையையொட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டுமே வழக்கமாக
இருக்கும் நிலையில், ஜெய்பூர் குடியிருப்பு பகுதிகள் வரை காணப்பட்டுள்ள சம்பவம் 1993ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான்
நிழழ்ந்துள்ளது தெரிவித்துள்ள என அம்மாநில வேளாண் துறை துணை இயக்குநர், வரும் நாட்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு
அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை முதல் நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் வரை நிகழ்ந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால்
ராஜஸ்தான் மாநிலத்தில் 6,70,000 ஹெக்டேர் பரப்பளவில் வேளான் பயிர்கள் பாதிப்படைந்தது. இதனால், சுமார் ரூ.1,000 கோடி வரை
 இழப்பு ஏற்பட்டதாக ராஜஸ்தான் மாநிலம் அரசு தெரிவித்துள்ளது. அங்கு மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம்,
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிலும் பயிர்களை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான பயிர்களை நொடிப்பொழுதில் தாக்கி சேதப்படுத்தும் வல்லமை கொண்ட இந்த வெட்டுக்கிளிகள் கூட்டத்தால்,
விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனினும், இவை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை
எனவும், அதற்குள்ளாக அவை அழிக்கப்பட்டு விடும் அல்லது அதன் உணவு தேவை அதற்குள்ளாகவே முடிந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பு கூடுதல்
கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad