கோரோசனை என்றால் என்ன?
korosanai enral enna in tamil
நாட்டு மாட்டு கோரோசனை
பதினைந்து வயதுக்கு மேற்பட்ட நாட்டு மாட்டின் உணவு மண்டல பகுதியில் கோரோசனை மஞ்சள் நிறத்தில் இருக்கும். மாடு இறக்கும் போது அதை எடுத்து நன்றாக காயவைத்து சித்த மருத்துவம் மற்றும் மாந்திரீகத்தில் பயன்படுத்த படுகிறது. கோரோசனைகளில் நாட்டு காராம் மாட்டில் இருந்து எடுக்கபட்ட கோரோசனைக்கே அதிக சக்தி உண்டு. அதிகம் துன்புறுத்தப் பட்ட மாட்டில் கோரோசனை இருக்காது.
கோரோசனை எப்படி உருவாகிறது
மாடுகள் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு சில பொருட்கள் ஜீரணம் ஆகாமல் அப்படியே தங்கி விடுவதால் அது நாட்கள் கடந்த நிலையில் கடினமான மாவு பொருளாக மறிவிடுவதாக கூறுபடுகிறது. இந்த கோரோசனையானது அனைத்து மாடுகளிலும் கிடைப்பது இல்லை வயதான ஏதாவது ஒரு மாட்டில் மட்டும் கிடைக்கும் . அனைத்து விலங்குகளிலும் கிடைப்பதில்லை. ஆயிரத்தில் ஒன்று மட்டுமே கிடைக்கும் என்று கூறுகின்றனர்.
பன்றியில் கோரோசனை
வெளிநாட்டை சார்ந்த் நபர் ஒருவர்க்கு பன்றியில் இருந்து கோரோசனை கிடைத்து அது பல கோடிகளுக்கு விலை போனதாக ஒரு தகவல் வெளியானது ஆனால் அவ்வகையான கோரோசனை நமது மருத்துவ முறை, மாந்திரீகம் அல்லது தெய்வ வழிபாட்டில் பயன்படுத்துவது இல்லை. பன்றியில் கோரோசனை கிடைப்பது மிக மிக அறிதான ஒன்றுதான்.
கஸ்தூரி கோரோசனை
கோரோசனை மாடுகளில் மட்டும் இல்லாமல் காட்டில் வாழக்கூடிய கஸ்தூரி என்ற மானில் இருந்தும் எடுக்கபடுகிறது. மாட்டில் இருந்து எடுக்கபடும் கோரோசனைக்கும் கஸ்தூரி மானின் கோரோசனைக்கும் வித்தியாசங்கள் ஏதும் இல்லை இரண்டும் ஒரே அளவுதான் செயல்படும். மானில் இருந்து கிடைக்கும் கோரோசனை தற்ச்சமயம் கிடைப்பதில்லை.
கோரோசனை எங்கு கிடைக்கும்
கோரோசனை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இவற்றில் அதிக கலப்படம் உள்ளது தெரிந்தவர்கள் மூலம் வாங்கினால் மட்டுமே சுத்த மான கோரோசனை கிடைக்கும்.
கோரோசனை விலை
சுத்தமான கோரோசனை கிடைப்பது மிகவும் அறிதாகிவிட்டது 1 கிராம் 100 ரூபாய்க்கு நாட்டு மருந்து கடைகளில் விற்க்கபடுகிறது ஆனால் அவைகள் சுதமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில கடைகளில் சுத்தமானவைகள் இருப்பதாகவும் 1 கிராம் 500 ரூபாய்க்கு மேல் விற்க்கபடுகின்றன என்று கூறுகின்றனர்.
சித்தர்கள்
பதினெட்டு சித்தர்களும் அவர்களை பின்பற்றி வந்த அவருடைய சீடர்கள், சித்த மருத்துவர்கள் அனைவருமே கோரோசனையை சித்த மருந்துவம் மற்றும் மாந்திரீகத்தில் பயன்படுத்தி உள்ளனர். அதற்கு சான்றாக அவர்களது குறிப்புகளில் கோரோசனை பயன்படுத்த வேண்டிய அளவுகள், முறைகள், பயன்கள் பற்றி விளக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment