Introducing New Tablet For Covid 19 கொரோனா சிகிச்சைக்கு புதிய மாத்திரை "ஃபேவிபிராவிர்" அறிமுகம் - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Sunday, June 21, 2020

Introducing New Tablet For Covid 19 கொரோனா சிகிச்சைக்கு புதிய மாத்திரை "ஃபேவிபிராவிர்" அறிமுகம்

கொரோனா சிகிச்சைக்கு புதிய மாத்திரை "ஃபேவிபிராவிர்" அறிமுகம்.
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய ஃபேவிபிராவிர் என்ற மாத்திரையை மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த மருந்துக்கு அவசரகால பயன்பாடு  என்பதன்  கீழ், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மாத்திரையை லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகளிடம் பரிசோதித்து பார்த்ததில் 88 சதவீதம் வரை வெற்றி கிடைத்துள்ளது.

ஒரு மாத்திரை விலை103 ரூபாய் என்றும், மருந்து சீட்டில் டாக்டர் எழுதி தந்த பின்னரே இந்த மாத்திரை விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேவிபிராவிர் மாத்திரையை சர்க்கரை நோய், ஹைபர்டென்ஷன் உள்ள நோயாளிகளுக்கும் கொடுக்கலாம்.

இந்த மாத்திரை, ஃபேவி புளூ பிராண்டின் கீழ் மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும்.

நோயாளிகளின் முழு ஒப்புதலை கையொப்பம் வாயிலாக பெற்ற பிறகே, அவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும்.

கொரோனா நோயாளிகள், முதல் நாள் மட்டும் 200 மில்லி கிராம் கொண்ட 9 மாத்திரைகளை இரண்டு வேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த 13  நாள்களுக்கு காலையும், மாலையும் 4 மாத்திரைகள் வீதம் எடுத்துக் கொண்டால் போதும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மருந்து ஏற்கெனவே ஜப்பானில், இன்ஃபுளூவன்சா காய்ச்சல்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கும் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று முதல், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த மருந்துக்கு, மருத்துவர்கள், மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad