சந்திர கிரகணம் எப்போது? - பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்றால் என்ன? || What Is Penumbral Lunar Eclipse In Tamil - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, June 4, 2020

சந்திர கிரகணம் எப்போது? - பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்றால் என்ன? || What Is Penumbral Lunar Eclipse In Tamil


2020ம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் நிகழ்வு வரும் ஜூன் 5ம் தேதி நடக்க உள்ளது.

வானில் நடக்கக் கூடிய இயல்பான நிகழ்வுகளில் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் பார்க்கப்படுகிறது. இந்த கிரகணங்கள் சில வகையாக பிரிக்கப்படுகின்றது.

சந்திர கிரகண வகைகள் :
சூரியனின் ஒளியை பிரதிபலிப்பது தான் சந்திரன். சூரியனை பூமியும், பூமியை சந்திரனும் சுற்றி வருகிறது.
இப்படி சுற்றி வரக்கூடிய நிலையில் சூரியன் => பூமி = > சந்திரன் என மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

அப்படி ஏற்படக் கூடிய சந்திர கிரகணம்

முழுமையான சந்திர கிரகணம் (Total Lunar Eclipse)
பகுதி சந்திர கிரகணம் (Partial Lunar Eclipse)
தெளிவற்ற சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse) - பெனும்ப்ரல்) என மூன்று வகைப்படுத்தப்படுகிறது.

முழுமையான சந்திர கிரகணம்:
இந்த நிகழ்வின் போது முழு நிலவான பௌர்ணமி தினத்தில் ஜொலிக்கக் கூடிய சந்திரன் முழுமையாக மறைக்கப்படக் கூடிய அற்புத நிகழ்வாக இருக்கும்.
முழுமையான சந்திர கிரகணத்தின் போது பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைக்கத் தொடங்கும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரியும்.

பகுதி சந்திர கிரகணம் (Partial Lunar Eclipse)
இந்த நிகழ்வு கடந்த ஆண்டு கூட நடந்தது. அப்போது சந்திரனின் ஒரு பகுதி மறைக்கப்படுவது தெளிவாகத் தெரிந்தது.

சந்திர கிரகணம்! செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்!!

தெளிவற்ற சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse) - பெனும்ப்ரல்)
இந்த நிகழ்வின் போது ஜொலித்துக் கொண்டிருக்கும் சந்திரனை ஒரு புகை அடித்தது போல மங்கலானதாக மாறுவதைப் பார்க்க முடியும்.

சில நேரங்களில் அதன் ஒரு பகுதிமட்டும் சிவப்பு நிறத்தில் அல்லது மறைக்கப்படும் நிகழ்வு நடக்கக் கூடும்.

அதாவது பூமியின் வெளிப்புற நிழல் மட்டும் சந்திரனின் மீது விழும் என்று கூறப்படுகிறது. இதனையே பெனும்ப்ரா சந்திர கிரகணம் என்று அழைக்கின்றனர். இதன் காரணமாக முழுமையான சந்திர கிரகணத்தைப் பார்க்கும் அனுபவத்தைப் பெற முடியாது என்று வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

பெனும்ப்ரல் சந்திர கிரகணம் எப்போது நிகழ்கிறது? (Strawberry Moon Eclipse)
பெனும்ப்ரல் சந்திர கிரகணம் ஜூன் 5 ஆம் தேதி, இரவு 11:15மணிக்கு தொடங்கி ஜூன் 6ம் தேதி 2:34 மணி வரை நடக்கிறது. இந்த கிரகணத்திற்கு ஸ்ட்ராபெரி மூன் கிரகணம் (Strawberry Moon Eclipse) என்று விஞ்ஞானிகள் அழைக்கப்படுகிறது. இந்த பகுதி சந்திர கிரகண நிக்ழவின் போது 57% நிலவு மறைக்கப்படும், நிலவு சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கின்றது.

எங்கெல்லாம் பார்க்கலாம்?

ஆசிய நாடுகளில் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் தெரியும். அதே போ ஆப்ரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதி நாடுகளில் தெரியும். மேலும் இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், அன்டார்டிகா உள்ளிட்ட இடங்களில் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் பார்க்க முடியும்.

இந்த சந்திர கிரகணம் மக்கள் கண்டு ரசிப்பது சற்று கடினம் தான். ஏனெனில் மங்கலான சந்திர கிரகணமாக இருக்கும் என்பதால் சரியாக தெரியாது.

ஜோதிடர்களின் கருத்து:

வானத்தில் நிகழக்கூடிய இந்த நிகழ்வை கண்டு ரசித்து மகிழலாம் என விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கும் அதே சமயம். பல ஆயிரம் ஆண்டுகளாக எந்த ஒரு தொலைநோக்கி கருவிகள் கண்டுபிடிக்கும் முன்னரே கிரகங்களை வைத்து ஜோதிடத்தை கணித்த நம் முன்னோர்களும், ஜோதிடர்களும் இந்த சந்திர கிரகணம் அல்லது சூரிய கிரகணம் முடிந்த பின்னர் பரிகாரம் செய்துகொள்வது நல்லது என கருத்து தெரிவிக்கின்றனர்.

சந்திர கிரகணம் முடிந்த பின் எந்த நட்சத்திரத்தினர், ராசியினர் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். எப்படி பரிகாரம் செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்..

No comments:

Post a Comment

Post Bottom Ad