Railway | கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட ரயிகளில் முன்பதிவு செய்தவர்கள் தங்களது பணத்தை திரும்பப் பெற தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட காலகட்டத்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டண தொகை திரும்ப வழங்கப்பட்டு வருகின்றன.
ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் வழியே பணம் அளிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்கள், அங்குதான் டிக்கெட் கட்டண தொகையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள ஒவ்வொரு கோட்டத்திலும் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டண தொகை வழங்கப்படுகிறது.
சென்னை கோட்டத்திற்குட்பட்ட முன்பதிவு மையங்கள் நாளை முதல் திறக்கப்படவுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இந்த மையங்கள் இயங்கும் என்று சென்னை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment