Corona's game is no longer in India... Chinese Experts Warning ! எச்சரிக்கும் சீன வல்லுநர்! இந்தியாவில் இனிமேல்தான் கொரோனாவின் ஆட்டமே இருக்கு... - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Tuesday, June 9, 2020

Corona's game is no longer in India... Chinese Experts Warning ! எச்சரிக்கும் சீன வல்லுநர்! இந்தியாவில் இனிமேல்தான் கொரோனாவின் ஆட்டமே இருக்கு...

இந்தியாவில் இனிமேல்தான் கொரோனாவின் ஆட்டமே இருக்கு... எச்சரிக்கும் சீன வல்லுநர்!


இந்தியா இன்னும் கொரோனா பாதிப்பின் உச்சத்தை பார்க்கவில்லை எனவும், கொரோனாவின் இரண்டாவது அலை இன்னும் மோசமாக இருக்கலாம் எனவும் சீனாவை சேர்ந்த முன்னணி தொற்றுநோய் வல்லுநர் எச்சரித்துள்ளார்.

சீன நகரமான ஷாங்காயில் உள்ள ஹவுஷான் மருத்துவமனையின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் ஷெங் வென்ஹாங் அரசு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகள் இன்னும் கொரோனாவின் உச்சத்தை பார்க்கவில்லை. இந்நாடுகளில் எப்போது கொரோனா பாதிப்பு குறையும் என்பது யாருக்கும் தெரியாது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்படுவதால் கொரோனா பாதிப்பு மேற்கொண்டு அதிகரித்து வருகிறது. எடுத்துக்காட்டாக இப்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. அங்கு உற்பத்தி மீண்டும் தொடங்கிய பிறகே பல்வேறு மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. ஈரான் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளிலும் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா கொள்ளை நோய் தற்போது அழிய வாய்ப்பில்லை எனவும், கோடைக்காலத்தில் இரண்டாம் அலை தொடங்கும் என ஏப்ரல் மாதத்திலேயே ஷெங் வென்ஹாங் எச்சரித்திருந்தார். அவர், “நீண்ட காலத்திற்கு தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் சந்தித்தப்பிறகே கொள்ளை நோய்களை கட்டுக்குள் கொண்டுவர முடியும். மக்களால் இயல்பாக வாழவும், தொழில் செய்யவும் முடியும். ஆனால் நோய் பரவலை முழுவதுமாக ஒழிக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் இதுவரை 2.56 லட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 7,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad