தொடை வலி குணமாக சித்த மருத்துவம் – Thodai Vali Maruthuvam In Tamil - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, June 25, 2020

தொடை வலி குணமாக சித்த மருத்துவம் – Thodai Vali Maruthuvam In Tamil

தொடை வலி குணமாக சித்த மருத்துவம் – Thodai Vali Maruthuvam In Tamil

கால் தொடை வலி குணமாக தீர்வு

தொடை வலி உண்டாக காரணம்
முதுகு தண்டு வடத்தில் L3 முதல் L5 வரை உள்ள தட்டுகள் நகர்ந்து சியாடிக் நரம்பை அழுத்துவதால் தொடையின் உட் புறம் மற்றும் வெளிப் புறத்திலும் வலி உண்டாகும். தண்டு வட தட்டுகள் எந்த பக்க கால் நரம்பை அழுத்துகின்றதோ அதை பொறுத்து வலது அல்லது இடது காலில் வலி உண்டாகும்.

தொடை வலியின் தீவிரம்
தண்டு வடத்தில் நரம்பு சிக்கி இருந்தாலோ அல்லது தண்டு வட தட்டுக்கள் காலுக்கும் செல்லும் நரம்புகளை அழுத்தி கொண்டு இருந்தாலோ வலி உண்டாகும். முதலில் இடுப்பில் கால் இணைப்பில் அதாவது பந்துகின்ன மூட்டில் முதலில் வலி தோன்றி மறையும் பின் நாட்கள் கடந்த நிலையில் பந்து கின்ன மூட்டில் இருந்து வலி கீழ் நோக்கி தொடை பகுதிக்கு செல்ல ஆரம்பிக்கும். தங்க முடியாத வலி உண்டாகும்.

முதலில் மருத்துவரை அன்னுகி உரிய சிக்கை பெற்றலாம் அல்லது ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், அல்லது மருத்துவம் பார்த்தும் குணமாகதவர்கள், கீழே கொடுக்கபட்ட முறைகளை பின்பற்றலாம்.

இதற்காண தீர்வை நம் பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் பார்ப்போம்.

தேவையான மூலிகைகள்
இளம் பிஞ்சு கத்தரிக்காயை – 1
முருங்கை விதை 5
ஒரு எலுமிச்சம்பழத்தின் தோல்
தக்காளி 1
மிளகு 2
மஞ்சள் தூள்
உப்பு தேவைக்கு ஏற்ப்ப
செய்முறை
ஒரு இளம் பிஞ்சு கத்தரிக்காயை (வரியுள்ள , விதையுள்ள காய்)  எடுத்துக் கொண்டு  ஒரு 10 நிமிடம் வெது வெதுப்பான  நீரில் ஊறப் போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் முற்றின  முருங்கை விதை  , ஒரு எலுமிச்சம் பழத்தின் தோலை நறுக்கி போட்டு அதனுடன்  தக்காளி, மிளகு , கொஞ்சம் மஞ்சள் தூள் ,  தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து  ஜூஸாக்கி வடிகட்டி   காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

தொடை வலி தைலம் செய்முறை
திப்பிலி 150 கிராம்,
இஞ்சி150 கிராம்
திப்பிலி மற்றும் இஞ்சி இரண்டையும் நன்றாக பஞ்சுபோல சிதைத்து வைக்கவும். ஒரு இரும்பு வாணலையில் அரை லிட்டர் கடுகு எண்ணெயை ஊற்றி லேசாக சூடாக்கவும் பின்னர் முன் நசுக்கி வைத்துள்ள திப்பிலி மற்றும் இஞ்சை போட்டு அதில் உள்ள நீர் சுண்டும் வரை நன்கு காய்ச்சி தைல பதம் வந்ததும் இறக்கி ஆற விட்டு ஓர் கண்ணாடி புட்டியில் ஊற்றி பத்திர படுத்தவும்.

தைலம் பயன்படுத்தும் முறை
மேற் சொன்ன முறையில் செய்த தைலத்தை வலி உள்ள தொடையின் இடுப்பு பகுதியில் இருந்து கால் முழுவதும் வெளிப் புறம் பூசி வரவும்.

மேற் குறிப்பிட்ட ஜூஸ் மற்றும் தைலத்தை மருந்து தயார் செய்து தினமும் பயன்படுத்தி வர விரைவில் நல்ல முன்னேற்றம் காணலாம்.



No comments:

Post a Comment

Post Bottom Ad