China on the border issue What's the problem with us? || பிரச்சினை எதற்கு நமக்குள் ? எல்லைப் பிரச்சினையில் இறங்கி வந்த சீனா! - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Tuesday, June 9, 2020

China on the border issue What's the problem with us? || பிரச்சினை எதற்கு நமக்குள் ? எல்லைப் பிரச்சினையில் இறங்கி வந்த சீனா!


பிரச்சினை எதற்கு நமக்குள் ? எல்லைப் பிரச்சினையில் இறங்கி வந்த சீனா!


மே மாதம் முதல் வாரத்தில் லடாக் அருகே இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் சீனா தரப்பில் 5000 ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். இதனால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை தொடங்கியது. இந்திய எல்லைப் பகுதியில் சாலைகள், பாலங்கள் கட்டுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பிரச்சினை குறித்து 10க்கும் மேற்பட்ட சந்திப்புகளில் இருதரப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜூன் 6ஆம் தேதியன்று 14ஆம் பட்டாளத் தளபதி ஹரிந்தர் சிங் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு சீன எல்லைப் பகுதியில் இருக்கும் மோல்டோ பகுதிக்குச் சென்று ஷிஞ்சியாங் ராணுவ மண்டல தளபதி லியு லின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் அமைதிவழியில் எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜூன் 6ஆம் தேதியன்று இந்திய, சீன தளபதிகள் மோல்டோ பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருதரப்பு பிரதிநிதிகளும் கலந்து ஆலோசித்தனர்.

எல்லைப் பிரச்சினையில் தீர்வு காண அண்மையில் இருதரப்பு தூதரக, ராணுவ பிரதிநிதிகள் தொடர்பில் இருக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள், பிரச்சினையாக உருவெடுக்காமல் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம். எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். தற்போது எல்லையில் நிலைமை சீராகவே இருக்கிறது. பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளும் தயாராக இருக்கின்றன” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad