இந்தியாவில் தெரியும், 2020ன் முதல் சூரிய கிரகணம்... Solar Eclipse Visible From India Time And Facts - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Tuesday, June 16, 2020

இந்தியாவில் தெரியும், 2020ன் முதல் சூரிய கிரகணம்... Solar Eclipse Visible From India Time And Facts

2020ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21ஆம் தேதி நிகழ்கிறது. இப்போது தோன்றும் இந்த சூரிய கிரகணம் 6 மணி நேரம் நிகழக் கூடியது.

இந்த கிரகண நேரத்தில் பூமிக்கும் நிலாவுக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கும். இப்படி அதிக தூரம் சென்றிருக்கும் நிலா, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கருப்பு தட்டை போல் தோன்றும்.

இந்த நிகழ்வு, தீ வலையத்தைப் போல் காட்சியளிக்கும். ஜூன் 21ஆம் தேதி நிகழும் இந்த நிகழ்வு இந்தியா, பாகிஸ்தான், சீனா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் தெரியும்.

ஆய்வாளர்கள் கணித்துள்ளபடி, சூரிய கிரகணம் ஜூன் 21ஆம் தேதி காலை 9. 15 மணிக்குத் தொடங்கி, மதியம் 3.04 வரை நிகழும். இதன் உச்ச நிலை மதியம் 12. 10 எனக் கூறப்பட்டுள்ளது.

கிரகணம் எந்தெந்த நாடுகளில் எந்த நேரத்தில் தெரியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த கிரகண நேரத்தில் மக்கள் முடிந்தளவு வீட்டிலே இருப்பது நல்லது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad