ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் - மேட்டூர் அணை நீர் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
தேவையில்லாமல் வெளியே சுற்றாதீர்கள் - முதலமைச்சர் அறிவுரை.
வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன - முதலமைச்சர்.
அரசின் ஊரடங்கு விதிகளை மக்கள் கடைபிடிக்காதது வருத்தமளிக்கிறது.
நோயின் தீவிரத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அரசுக்கு தயவுசெய்து ஒத்துழைப்பு வழங்குங்கள்- முதலமைச்சர் வேண்டுகோள்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.
கொரோனா பரவல் குறித்து எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தவறாக விமர்சிக்கிறார்கள்.
பள்ளிகளில் அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை.
கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மத்திய அரசு நிர்ணயித்ததை விட தமிழகத்தில் குறைவு.
கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும்.
*மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் நீர் திறந்து விடப்படும்.*
*5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன; உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை.*
*முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் தீவிரம்.*
*- முதல்வர் பழனிசாமி.*
*கடைமடை வரை மேட்டூர் அணையின் நீர் சென்று சேர அரசு நடவடிக்கை.*
டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகள் 80% நிறைவடைந்துள்ளன.
குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் 1,433 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
முதல்வர் பழனிசாமி.
8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் பழனிசாமி.
No comments:
Post a Comment