கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆறாவது நாளாக 1500ஐக் கடந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்களில் இருபதாயிரத்தை எட்டிய பாதிப்பு இரண்டே வாரத்தில் அடுத்த இருபதாயிரத்தை கடந்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் 39 வயதான பெண் நீதிபதி ஒருவருக்கும், 34 வயதான ஆண் நீதிபதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் வைரஸ் தாக்குதல் குறைவாக இருப்பதால் நீதிபதி குடியிருப்பில் உள்ள தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கு வந்த கல்வித் துறை அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி கணித ஆசிரியர்களுக்கு 10 நாள்கள் ஆன்லைன் பயிற்சி முகாம் நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஜுன் 15ஆம் தேதி மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்தது
சென்னையில் மட்டும் நேற்று ஒரேநாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 28,924 பேர் சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்தாலும் குணமடைபவர்கள் பட்டியலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1342 பேர் நலமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று கொரோனாவால் மேலும் 18 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்தது.

No comments:
Post a Comment