Do's Don'ts During Lunar Eclipse June 2020 || சந்திர கிரகணம் 2020 பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரத்தினர் யார்? - என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது? - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, June 4, 2020

Do's Don'ts During Lunar Eclipse June 2020 || சந்திர கிரகணம் 2020 பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரத்தினர் யார்? - என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது?

Do's Don'ts During Lunar Eclipse June 2020 || சந்திர கிரகணம் 2020 பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரத்திரனர் யார்? - என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது?

சந்திர கிரகணம் ஜூன் 5ம் தேதி நிகழ்கிறது. இதனால் எந்த ராசி, நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்ய வேண்டியது அவசியம். சந்திர கிரகண நேரத்திலும், கிரகண நேரம் முடிந்த பின்னர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்...

சந்திர கிரகணம் நிகழும் நேரம் : பாதிக்கப்படும் ராசி, நட்சத்திர பட்டியல்

சந்திர கிரகணம் ஜூன் 5ம் தேதி நள்ளிரவில் தொடங்கி ஜூன் 6ம் தேதி வரை என 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணத்தினால் எந்த ராசி, நட்சத்திரத்தினுக்குப் பாதிப்பு ஏற்படும். அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன பார்ப்போம்...

ஆண்டு தோறும் இரண்டு அல்லது மூன்று முறை சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நிகழ்வது வழக்கம். அப்படி 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி 10ம் தேதி நிகழ்ந்தது. இந்நிலையில் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இந்த மாதம் ஜூன் 5ம் தேதி நள்ளிரவு நிகழ உள்ளது.

சந்திர கிரகணம் நிகழும் நேரம் :

2020 ஜூன் 5ம் தேதி நிகழக் கூடிய சந்திர கிரகணம் இரவு 11.15 மணிக்கு தொடங்கி ஜூன் 6ம் தேதி நள்ளிரவு 2.34 மணி வரை நீடிக்கிறது. அதாவது 3 மணி நேரம் 18 நிமிடங்கள் வரை இந்த நிகழ்வு நீடிக்கிறது. இந்த சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ்(Strawberry Moon Eclipse) என அழைக்கப்படுகிறது.


தெளிவற்ற சந்திர கிரகணம்

பௌர்ணமி தினத்தன்று பால் போல பளிச்சென்று தெரியக்கூடிய சந்திரன் இந்த கிரகணத்தின் போது சிவந்த மங்கலானதாகத் தென் படும். இதற்கு penumbral lunar eclipses (பெனும்ரல் சந்திர கிரகணம்).

இந்த அழகிய நிகழ்வு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஐரோப்பா, அரேபிய நாடுகள், ஆபிரிக்கா நாடுகள், தென் அமெரிக்காவின் தென் கிழக்கு நாடுகளில் பார்க்க முடியும்.

எந்த ராசி, நட்சத்திரத்தினுக்குப் பாதிப்பு?

ஜூன் 5ம் தேதி நிகழும் சந்திர கிரகண நிகழ்வு இரவு 11.15 மணி என்பதால் கேட்டை நட்சத்திரத்தில் நிகழ்கிறது.

அதன் காரணத்தால் கேட்டை நட்சத்திரமும், அதன் முன் மற்றும் பின் உள்ள அனுஷம், மூலம் நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

அதோடு கேட்டை நட்சத்திரம் புதன் பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நட்சத்திரம் என்பதால் புதன் பகவான் ஆட்சி செய்யக் கூடிய நட்சத்திரங்களான ரேவதி, ஆயில்யம் நட்சத்திரம் ஆகிய நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்வது அவசியம்.

பாதிக்கப்படும் நட்சத்திர பட்டியல்

அனுஷம் நட்சத்திரம் - விருச்சிகம்

கேட்டை நட்சத்திரம் - விருச்சிகம்

மூலம் நட்சத்திரம் - தனுசு

ரேவதி நட்சத்திரம் - மீனம் ராசி

ஆயில்யம் நட்சத்திரம் - கடக ராசி

பாதிக்கப்படும் ராசி பட்டியல்

புதன் ஆட்சி செய்யும் மிதுனம் ராசி

புதன் ஆட்சி செய்யும் கன்னி ராசி

பாதிக்கப்படும் நட்சத்திரங்களைக் கொண்ட ராசி

விருச்சிகம்

தனுசு

மிதுனம்

கடகம்



கிரகணமும் மனித உடலும்:

சந்திர கிரகணம் என்பது எப்படி சூரியன் சந்திரனுக்கு இடையே பூமி வருவதால் ஏற்படுகின்றதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனரோ, அதே போல் நம் உடலான பூமி, மனதை இயக்கும் சந்திரன், நம் ஆத்மாவான சூரியனைக் குறிப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இப்படி உடல், மனம், ஆத்மா என மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரக் கூடிய நேரம் தான் கிரகண நேரம். அதனால் இந்த நேரத்தில் நாம் எதைச் செய்தால் அது பல மடங்கு யோகத்தை கொடுக்கக் கூடிய உந்துதலை நம்மில் ஏற்படுத்தும் என்கின்றனர்.

கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்

கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்

யோகத்தை அதிகளவில் தரக் கூடியது என்பதால் இந்த நேரத்தில் நம் இறைவனின் திருநாமத்தை ஜெபித்து வந்தால் நம் பாவங்கள் நீங்கப்பெறும்.

காயத்ரி மந்திரம் சொல்லலாம்

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!

இல்லை என்றால் “ஓம் நமோ நாராயணா”, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா என்ற எளிய மந்திரங்களை உச்சரித்து உங்களின் பாவங்களை தொலைக்கலாம்.

இறை வழிபாடு செய்ய முடியவில்லை, எந்த நல்ல காரியம் செய்ய முடியவில்லை என்றாலும் நாம் அமைதியாக தியானித்தாலே போதும். சந்திர கிரகணம் இரவில் வரக்கூடியதாக இருப்பதால் இறைவனை வணங்கி நிம்மதியாகப் பிறரை தொந்தரவு செய்யாமல் உறங்கினால் கூட போதும்.

செய்யக் கூடாதது:

கர்ப்பிணிகள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது. கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் அவர்களின் உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் சொரிந்தால், அந்த இடத்தில் குழந்தைக்கு கருப்பாக அல்லது ஏதேனும் அடையாளம் தோன்றும் என கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் கண்டிப்பாக உடலுறவு வைத்துக் கொள்ளுதல் கூடாது. வீட்டை சுத்தம் செய்தல், கூடாது.

கிரகண நாளிலாவது கிரகணத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட வேண்டும். கிரகண நேரத்தில் நம் வயிற்றில் உள்ள உணவு நன்றாக செரித்து முடிந்த நிலையில் இருப்பது நல்லது.

கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டியது :

கிரகணம் முடிந்ததும் ஐயர்களை அழைத்து பரிகாரம் செய்யலாம். அப்படி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கிரகணம் முடிந்த பின், வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து, நாமும் நன்றாக சுத்தமான பின்னர் சுவாமி படங்களை சுத்தம் செய்து விளக்கேற்றி இறைவனை வணங்கவும்.

கிரகணம் முடிந்த பின்னர் பொதுவாக நம் முன்னோர்கள் கடலில் குளிக்க வேண்டும் என்பார்கள். அல்லது நம் வீட்டிலேயே குளிக்கும் நீரில் சிறிது கல் உப்பு போட்டு அந்த தண்ணீரில் குளிப்பதால் நம்மை சுற்றியுள்ள தீவினைகள் நீங்கும். அதே போல் நம் உடலில் உள்ள நுண் கிருமிகள் மடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad