The Miracle that happens After 100 years layer| | 100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அதிசயம் 30 நாட்களுக்குள் இரண்டு சந்திர கிரகணம், ஒரு சூரிய கிரகணம் - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Tuesday, June 16, 2020

The Miracle that happens After 100 years layer| | 100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அதிசயம் 30 நாட்களுக்குள் இரண்டு சந்திர கிரகணம், ஒரு சூரிய கிரகணம்

100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அதிசயம் 30 நாட்களுக்குள் இரண்டு சந்திர கிரகணம், ஒரு சூரிய கிரகணம் 

கிரகணம் என்பது அறிவியல் ரீதியாக சாதாரண நிகழ்வாக பார்க்கப்பட்டாலும்,ஜோதிடப்படி சில மோசமான நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. கிரகணம் இறைவனை வணங்க வேண்டிய நேரமாக பார்க்கப்படுகிறது.

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் இரண்டும் அறிவியலில் வானில் நடக்கும் சாதாரண நிகழ்வுகள். ஆனால் ஜோதிடத்தில், இரண்டு நிகழ்வுகளும் பூமியில் மனித குலத்திற்கு நல்லதாகக் கருதப்படவில்லை. கிரகணங்கள் நிலவக் கூடிய நேரத்தைப் பொறுத்து இந்த ஜோதிட நிகழ்வுகளால் சிலருக்கு நல்ல பலன்களும், சிலருக்கு சில கெடு பலன்களும் நடக்க வாய்ப்புள்ளது.

கிரகணம் நடக்க இருக்கும் நேரத்தில் நடக்கும் நட்சத்திரத்திற்கு தோஷம் பிடிக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை.

சூர்யா கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் இரண்டு நிகழ்வுகள் ஒரே மாதத்தில் வருவது புதிதல்ல. ஆனால் இரண்டு சந்திர கிரகணம், ஒரு சூரிய கிரகணம் என மூன்று கிரகணங்கள் 30நாட்களில் நடப்பது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடக்கிறது.

கிரகணங்களின் பக்க விளைவுகள்

ஜோதிடத்தின் படி, சந்திர கிரகணங்கள் ஜூன் 5 மற்றும் ஜூலை 5, சூரிய கிரகணம் ஜூன் 21ம் தேதி என 30 நாட்களுக்குள் மூன்று கிரகணம் வருவதால் ஜோதிட கணிப்பின் படி, பல இயற்கை பேரழிவுகள் ஏற்படக் கூடும் என தெரிவிக்கின்றனர்..

கிரகணங்கள் எப்போது?

சூரிய கிரகணம்
ஜூன் 21ம் தேதி நடக்க இருக்கும் சூரிய கிரகணம் காலை 10.16 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நீடிக்கிறது. சூரிய கிரகணத்தின் உச்சம் காலை 11.49 மணிக்கு இருக்கும்.
இந்த சூரிய கிரகணம் 3 மணி நேரம் 14 நிமிடம் 24 விநாடி வரை நீட்டிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம்

ஜூன் 5ம் தேதி இந்தாண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், ஜூலை 5ம் தேதி மீண்டும் ஒரு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

இந்த தெளிவற்ற சந்திர கிரகணம் (Penumbral Eclipse) ஜூலை 5ம் தேதி காலை 8.37.23 மணிக்கு தொடங்குகிறது. காலை 11.22.21 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடைகிறது. இந்த கிரகணத்தின் உச்ச நிலை காலை 9.59.51 மணியாக இருக்கும்.

மொத்தம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திர கிரகணம் காலை நேரத்தில் நடப்பதால் இந்தியாவில் பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad