டெல்லியில் ஜூன் 10-ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்..
ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.
ஜல் சக்தி துறையின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம் இணைக்கப்பட்ட பின்னர் அந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் 10-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
அப்போது, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் 101 அடிக்கு கூடுதலாக நீர் இருப்பு உள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் 3,25,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்வதற்காக கால்வாய்களை தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

காவிரியில் கடந்த ஆண்டு 275 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment