கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை - சென்னை மாநகராட்சி ஆணையர். Whom take covid 19 Test that person and family gone under quarantine 14 days - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, June 11, 2020

கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை - சென்னை மாநகராட்சி ஆணையர். Whom take covid 19 Test that person and family gone under quarantine 14 days

கொரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்துடன் அந்த நபர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இயங்கிவரும் பரிசோதனை மையத்தின் பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று ஆலோசனை நடத்தினார்.

அதில், சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள 30 அரசு மற்றும் தனியார் மையங்களில் நோய்தொற்று பரிசோதனைக்கு வருபவர்களின் பெயர், முழு முகவரி, வயது, பாலினம், தொழில், குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் கடந்த 15 நாட்களில் தொடர்பில் இருந்த நபர்களின் விபரங்களை கட்டாயம் சேகரித்து சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணையர் கேட்டுக்கொண்டார்.

இதன்மூலம் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை எளிமையாக கண்டறிய முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இந்த மையங்களில் பரிசோதனை செய்பவர்கள் தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad