ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் காந்தி காலனியில் தாய் மற்றும் சகோதரனுடன் 14 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார். அவரது தந்தை ராணுவ வீரராக உள்ளார். தற்போது அருணாச்சல பிரதேசத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் நேற்று அதிகாலை தனது படுக்கையறையில் வென்டிலேட்டரின் கிரில்லில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக ரயில்வே காலனி காவல் நிலைய பொறுப்பாளர் ஹன்ஸ்ராஜ் மீனா தெரிவித்தார்.
மேலும் சிறுவனின் குடும்பத்தினர் கூற்றுப்படி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுவன் பப்ஜி கேம் ஐ பதிவிறக்கம் செய்துள்ளான். அதன்பின்னர் தொடர்ந்து 3 நாட்கள் அந்த கேமை விளையாடியுள்ளான். அதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலை 3 மணி வரை தனது சகோதரன் அறையில் பப்ஜி விளையாடி இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தூங்கச் சென்ற சிறுவன் வெண்டிலேட்டர் கிரில்லில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டான். அவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment