Google Introduce to Find the Covid 19 Testing Center in Google maps and Google Assistant | | இனி கூகுள் மேப், அசிஸ்டெண்ட் மூலம் கொரோனா பரிசோதனை மையங்களை கண்டறியலாம்! - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, June 13, 2020

Google Introduce to Find the Covid 19 Testing Center in Google maps and Google Assistant | | இனி கூகுள் மேப், அசிஸ்டெண்ட் மூலம் கொரோனா பரிசோதனை மையங்களை கண்டறியலாம்!

இனி கூகுள் மேப், அசிஸ்டெண்ட் மூலம் கொரோனா பரிசோதனை மையங்களை கண்டறியலாம்!

கூகுள் தேடல்கள், அசிஸ்டெண்ட் மற்றும் மேப் மூலமாக கொரோனா பரிசோதனை மையங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் நாடு முழுவதும் மருத்துவ பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு இந்த மையங்கள் எங்கே இருக்கிறது என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் இல்லை. அதனால் அவர்களது பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கூகுள் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.

கூகுள் தேடல்கள், அசிஸ்டெண்ட் மற்றும் மேப் வசதியுடன் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் கொரோனா பரிசோதனை மையங்களை தெரிந்துகொள்ளலாம். நீங்கள் கூகுள் பயன்படுத்தும் போது ஆங்கிலத்தில் இந்த தகவல்கள் அனைத்தும் வரும். இதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி ஆகிய 8 மொழிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

கூகுளில் ’Coronavirus Testing’ ‘Covid-19 testing’ அல்லது ‘Covid testing’ என தேடும் போது பரிசோதனை மையங்கள் குறித்த அனைத்து தகவல்களும் அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா தொடர்பான செய்திகளும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக பரிசோதனை மையங்கள் அரசால் நடத்தப்படுபவையா அல்லது தனியாரால் நடத்தப்படுபவையா என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே சேவை கூகுள் மேப்பிலும் வழங்கப்படுகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த புதிய சேவை வழங்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் MyGov உடன் இணைந்து செயல்படுவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 300 நகரங்களில் உள்ள 700க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை குறித்த விவரங்கள் இந்த சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசும் ஆரோக்கிய சேது செயலியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad