solar eclipse on June 21, 2020. what's the effects on this solar eclipse? | | ஜூன் 21ல் வரும் சூரிய கிரகணம் 2020 ? சூரிய கிரகணத்தின் விளைவுகள் - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Tuesday, June 16, 2020

solar eclipse on June 21, 2020. what's the effects on this solar eclipse? | | ஜூன் 21ல் வரும் சூரிய கிரகணம் 2020 ? சூரிய கிரகணத்தின் விளைவுகள்

ஜூன் 21ல் வரும் சூரிய கிரகணம் 2020 ?

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது. இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சி தரும். இந்த கிரகணம் பற்றி மேலும் அறிவோம்.


பிரகாசமான வளையம் போல ஜொலிக்க இருக்கும் சூரியன்
இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் முதல் சூரிய கிரகணம் வரும் ஜூன் 21ம் தேதி நடக்க உள்ளது. இந்த நிகழ்வைப் பார்க்க உலகம் முழுவதும் ஆவலுடன் இருக்கிறது. ஜோதிடத்தின் படி, கொரோனா தொற்றுநோய் 2019 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்திலிருந்து தொடங்கி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தில் முடிவடையும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் முதல் சூரிய கிரகணம் நடக்கும் போது, சூரியன் ஒரு பிரகாசமான வளையத்தைப் போல இருக்கும். இந்த கிரகணம் தொடர்பான பிற முக்கிய விஷயங்களை அறிந்து கொள்வோம்

கிரகணம் இந்தியாவில் எப்படி தெரியும்?

இந்த கிரகணம் உலகின் பல நாடுகளில் காண முடியும். பூமி - சந்திரன் - சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் சூரியனின் 99 சதவீதத்தை மறைக்கக் கூடும். சூரியனை நடுவில் சந்திரனின் நிழல் விழுவதால் பார்க்க ஒரு பொன் வளையம் போல ஜோலிக்கும்.

எந்த இடங்களில் எல்லாம் பார்க்க முடியும்?

சூரியனின் ஒரு பகுதியை சந்திரனின் நிழல் மறைக்கும் போது பகுதி சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அதுவே சூரியன் முழுவதுமாக மறைக்கப்பட்டால் பூரண அல்லது முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

இந்த கிரகணம் இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பார்க்க முடியும். இந்தியாவின் வடக்கு பகுதியில் மோதிர வடிவத்தில் காணமுடியும் என்று நம்பப்படுகிறது. மறுபுறம், இது டெல்லி, சண்டிகர், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் ஓரளவு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கிரகணம் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவின் பெரும்பாலான பகுதி, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் என பல பகுதிகளில் பார்க்க முடியும்


சூரிய கிரகண நேரம்

கிரகணம் ஜூன் 21 அன்று காலை 10:31 மணிக்கு தொடங்கி மதியம் 2:30 மணிக்கு முடிவடையும். கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் நண்பகல் 12:18 மணி. கிரகணம் மொத்தம் 3 மணி 33 நிமிடங்கள் நீடிக்கிறது.
இந்த கிரகணம் உலகில் முதலாவதாக 9.15.58 மணிக்கு தொடங்குகிறது.
முழு கிரகணம் காலை 10.17.48 மணிக்கு தொடங்குகிறது. உச்சகட்ட கிரகணம் நண்பகல் 12.10.04 மணிக்கு சில பகுதியில் கிரகணம் முடியும் நேரம் மதியம் 14.02.17 மணிக்கு
கடைசியாக கிரகணம் முடியும் நேரம் 15.05.01 மணிக்கு


சூரிய கிரகணத்தின் விளைவுகள்

ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த சூரிய கிரகணம் காரணமாக கிரக நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்கள் கொரோனா தொற்றுநோயின் முடிவுக்குக் காரணமாக அமையும் என நம்பப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய இந்த சூரிய கிரகணம் காரணமாக மழை குறைவு, கோதுமை, நெல் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தி குறையக்கூடும். அதே நேரத்தில், பசுவின் பால் உற்பத்தியும் குறையக்கூடும். இது தவிர, முக்கிய நாடுகளுக்கிடையே அதிகரித்த பதற்றம் மற்றும் விவாதம், விவகாரம் மேலும் பதற்றத்தைக் கொடுக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அதே நேரத்தில், இந்த கிரகணம் வர்த்தகர்களுக்கு நல்லது மற்றும் பணியாளர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.


கிரகணம் தொடர்பான மதிப்புகள்


சூரிய கிரகணம் பற்றி மக்கள் மத்தியில் பல்வேறு வகையான நம்பிக்கைகள் உள்ளன. கிரகணத்தின் போது சப்பிடக் கூடாது. சமைத்த சாப்பாடு இருந்தால் அதில் தர்ப்பை புல் அல்லது துளசி போட்டு வைக்க வேண்டும். தர்ப்பை புல், துளசி கெட்ட கதிர்வீச்சை உட்கிரகித்துக் கொள்ளும் என்பது நம்பிக்கை. கிரகணத்தின் போது நாம் வீட்டிலிருந்து இறைவனை வேண்டிக் கொள்ளலாம். ஆனால் கோயில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. கிரகணம் முடிந்த பின்னர் குளிக்க வேண்டியது கட்டாயம் என்கின்றனர்.


சூரிய கிரகணத்தின் போது சூரிய கடவுளை வழிபடும் வகையில் சூரிய பகவானுக்குரிய மந்திரங்களும் ஓதி வழிபடலாம்.


சூரிய காயத்ரி மந்திரம் :


ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்:

காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரம்

காயத்ரி மந்திரம் 2
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்:

No comments:

Post a Comment

Post Bottom Ad