இந்தியாவுக்கு புதிய பெயர்: உருவாகும் ஆதரவும், எதிர்ப்பும்! New Name For India Bharat or Hindustan - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, June 13, 2020

இந்தியாவுக்கு புதிய பெயர்: உருவாகும் ஆதரவும், எதிர்ப்பும்! New Name For India Bharat or Hindustan

தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி எனக் கூறியுள்ள சத்குரு, தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் திருத்தம் செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் - ஒரு உணர்வுப்பூர்வமான மொழி, தொன்மையான கலாச்சாரமும்கூட. இடத்தின் பெயர்கள் அவற்றின் பெருமை வாய்ந்த கலாச்சார சிறப்பு, வரலாறு & ஆன்மீக முக்கியத்துவத்தை குறிக்கும். தமிழ் மக்களுக்கு தங்கள் மண்ணின் மீது ஆழ்ந்த பிடிப்பினை உண்டாக்கும் அதன் பெயர் சூட்டும் மரபினை காப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்.

இதேபோல், இந்தியாவின் பெயரையும் நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவும் மக்கள் மனதில் பெருமிதம் உருவாகவும் ‘பாரத்’ (பாரதம்) என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு முன்பு இந்தி திணிப்பு தொடர்பாக வட இந்திய ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு சத்குரு பதில் அளிக்கும் போது, “தமிழ் வெறும் ஒரு மொழி மட்டும் அல்ல. அது ஒரு கலாச்சாரம், பண்பாடு. மக்களின் மனதில் ஆழமாக வேர் ஊன்றியுள்ளது. தமிழ்நாட்டில் அவர்கள் தமிழை பேசுவது மட்டுமல்லாமல் அதை சுவாசிக்கின்றனர். தமிழுடன் இவ்வளவு ஆழமான உணர்வு ரீதியான தொடர்பு இருக்கும் போது உங்கள் மொழியை அவர்கள் மீது திணிக்க முயற்சிக்காதீர்கள்” என்று தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசினார்.

தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு வரவேற்பு இருந்தாலும், பல பெயர்களை தமிழ்ப்படுத்தாமலே ஒலி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

அதே சமயம் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியாவின் பெயரை மாற்றக்கூடாது என்று கூறியுள்ளார். ஒருவேளை மாற்ற வேண்டுமானால் இந்திய ஐக்கிய நாடுகள் என மாற்றலாம் எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad