தமிழகத்தில் 75 நாட்களுக்குப் பிறகு திருச்சி செங்கல்பட்டு இடையே இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.| |Chengelpet to Trichy Trains Are Operating After 75 Days in Tamilnadu - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, June 13, 2020

தமிழகத்தில் 75 நாட்களுக்குப் பிறகு திருச்சி செங்கல்பட்டு இடையே இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.| |Chengelpet to Trichy Trains Are Operating After 75 Days in Tamilnadu

தமிழகத்தில் 75 நாட்களுக்குப் பிறகு திருச்சி செங்கல்பட்டு இடையே இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளுக்கான சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, தமிழகத்தில் 4 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 2 சிறப்பு ரயில்கள் திருச்சி - செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டன. 22 பெட்டிகளை கொண்ட இந்த ரயில், திருச்சியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியே செங்கல்பட்டு வந்தடைந்தது.

மற்றொரு ரயில் காலை 6.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம், மேல்மருவத்தூர் வழியே செங்கல்பட்டு வந்து சேர்ந்தது. உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad