கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், தாண்டேலியில், பாட்டீல்
தனியார் மருத்துவமனை உள்ளது. கையில் காயம் ஏற்பட்ட குரங்கு ஒன்று, மருத்துவமனை நுழைவாயில் படிக்கட்டில் அமர்ந்து, காயமடைந்த இடத்தை தொட்டு காண்பித்தபடி இருந்தது. இதை பார்த்த ஊழியர்கள், குரங்கை விரட்ட முயன்றனர். அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டது.
அங்கு வந்த நபர் ஒருவர், குரங்கின் காயத்தை பார்த்து, மருந்தை வரவழைத்தார். காயத்திற்கு மருந்து தடவி கட்டு போட்டார். இதன் பின், குரங்கு அங்கிருந்துசென்றது.
No comments:
Post a Comment