மீண்டும் தொடங்குங்கள்... ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மறுபடியும் அனுமதித்தது உலக சுகாதார அமைப்பு
கோவிட்-19 தொற்று பாதுகாப்பு கண்காணிப்பு குழு மீண்டும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என அனுமதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா இறப்பு விகிதத் தகவலை ஆய்வு செய்ததை வைத்து பார்த்ததன் அடிப்படையில், WHO-இன் தொற்று பாதுகாப்பு கண்காணிப்பு குழு மீண்டும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என அனுமதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியோசஸ் தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட நோயாளிகள், அந்த மருந்துகளைப் பயன்படுத்தாதவர்களை விட அதிக அளவில் உயிரிழப்பதாக சில ஆய்வுகள் தெரிவித்திருந்ததால், உலக சுகாதார அமைப்பு அந்த சிகிச்சையை நிறுத்தி வைத்திருக்குமாறு கடந்த மாதம் 26 தேதி எச்சரித்திருந்தது. இந்த மருந்து பரிசோதனை ட்ரையல் முறைகளுக்காக 35 நாடுகளைச் சேர்ந்த 3500-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருந்துகள் அளித்து சோதனை செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
கோவிட்-19-க்கு எதிராக, சிகிச்சை, நோய் தடுப்பு மற்றும் நோய் கண்டறியும் செயல்பாடுகளில் அறிவியல் கண்ணோட்டத்துடனும், தீர்வுகள் மற்றும் ஆதரவுடனும் உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாக செயல்படும் எனவும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19-க்கு எதிராக, சிகிச்சை, நோய் தடுப்பு மற்றும் நோய் கண்டறியும் செயல்பாடுகளில் அறிவியல் கண்ணோட்டத்துடனும், தீர்வுகள் மற்றும் ஆதரவுடனும் உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாக செயல்படும் எனவும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment