சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 58 வயதான தலைமை செவிலியர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அந்த செவிலியருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் இதய கோளாறு இருந்ததாகவும், அதனால் அவர் சிகிச்சையின்போது இறந்ததாகவும் அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறியுள்ளார்.
*ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தலைமை பெண் செவிலியருக்கு கொரோனா இல்லை. அவருக்கு கொரோனா என தவறாக மருத்துவ அறிக்கையில் பதிவிட்டிருக்கலாம் என மருத்துவமனை டீன் ஜெயந்தி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்றிரவு மட்டும் நான்கு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment